உங்களின் வயது அதிகமாகிவிட்டது என்று அடிக்கடி உங்களுக்கு ஞாபகப்படுத்தும் விஷயங்கள் எவை?



  1. அங்கிளை அண்ணா என்று தானாக கூப்பிட பழகியபோது.
  2. நண்பர்கள் கைவிட்டு எண்ணும் அளவிற்கு தான் என்று உணர்ந்த போது.
  3. +2 முடித்த பக்கத்து வீட்டு பையன் எந்த காலேஜில் சேரலாம் என்று அட்வைஸ் கேட்கும்போது.
  4. வீட்டில் முக்கியமாக முடிவுகளில் ஆலோசனை என்னிடம் கேட்டபோது.
  5. தோழிகளுக்கு காதல் ஆலோசனைகள் கொடுக்கும்போது.
  6. 'அடுத்து என்னமா கல்யாணமா' என்று ஆண்டி கேட்கும் போது.
  7. கல்லூரியில் படிகளில் ஏறி மூச்சு வாங்கினால் 'வயசாயிடுச்சுல' என்று சொல்லி நண்பர்களுடன் சிரிக்கும்போது.
  8. பிளாக் செய்தவர்கள் லிஸ்ட்டை எடுத்துப் பார்க்கும்போது.
  9. வெளி தோற்றம் மட்டும் அழகில்லை என்று உணர்ந்த போது.
  10. 'போய் பிரியங்கா கிட்ட கேளுங்க' என்று யாராவது சொல்லும்போது.
  11. இரவு நேரங்களில் தனியாகப் பயணிக்க பழகிக் கொண்ட போது.
  12. பேருந்தில் தனியாக பயணிக்கும் போது 20 முறை வந்த அம்மாவின் தொலைபேசி அழைப்பு ஒரு முறையாக குறைந்தபோது.
  13. என் கைபேசியை வேறு யாரும் தொடாத போது.
  14. வங்கியில் 'வாங்க மேடம்' என்று சொன்னபோது.
  15. பேருந்தில் 'பேக் வெச்சுக்கோங்க அண்ணா' என்று கூறிய பொழுது 'நான் ஸ்கூல்ல படிக்கிறேன் அக்கா' என்று பதில் கேட்டபொழுது.
  16. 'எரும மாடு வயசு ஆகுது' என அம்மா திட்டின போது.
  17. அம்மா விபத்துக்குள்ளான நேரத்தில் வீட்டின் அனைத்து வேலைகளையும் தனியாக இரண்டு மாதம் செய்தபோது.
  18. நான் ரசித்துக் கேட்கும் பாடலை அத்தை மகள் 'பழைய காலத்து பாடல்' என்று கூறியபோது.
  19. திருமணமான தோழியை 'ஆன்ட்டி' என்று கூப்பிடும்போது.
  20. கோபம் வரும்போது நிதானமாக சிரிக்க பழகிக் கொண்ட போது.
நன்றி.

Comments