Skip to main content
மனிதர்களின் நடத்தையைப் பற்றிய மிகவும் சுவாரசியமான உண்மைகள் யாவை?

- ஒரு மனிதனின் டெஸ்டோஸ்டெரோன் ( testosterone) அதிக அளவில் இருக்குமென்றால் அவர்கள் மற்றவர்களை கோபமூட்டி அதை பார்த்து சந்தோசப்படுவார்கள்.
- தாழ்வுமனப்பான்மை உள்ள மனிதர்கள் மற்றவர்களை எப்பொழுதும் மட்டம் தட்டியும், இழிவாகவும் பேசுவார்கள் .
- மற்றவர்களை பற்றி கேள்விப்படும் எதிர்மறையான விஷயங்கள் அனைத்தும் முழுவதும் உண்மை என நம்புவார்கள்,மற்றவர்கள் என்னதான் நல்ல விதமாக நடந்தாலும் அதற்க்கும் கேள்விப்பட்ட அவதூறுகளுக்கும் எதுவும் சம்பந்தம் இல்லை என்று கருதுவார்கள் . இதில் வேடிக்கை என்னவென்றால் மற்றவர் அவமானப்படும் தருணங்களை வைத்து இவர்களுடைய தாழ்வுமனப்பான்மையை சரிசெய்து கொள்வார்கள்
- ஒருவருடைய நடத்தையை அவரது உடல்சார்ந்த உணர்வின் மூலம் எளிதில் கண்டுகொள்ளலாம் . அவர்கள் வைத்துள்ள பொருட்களின் எடை,மதிப்பு ,வண்ணம் போன்றவற்றை சார்ந்தும் அவர்களின் நடத்தைகள் வேறுபடும்
- அதைப்போலவே ஒருவர் இருக்கும் இடத்தை சுற்றியுள்ள பொருட்களின் வளையும் தன்மை மற்றும் உறுதிதன்மை பொருத்தும் நடத்தைகள் மாறும் உதாரணமாக ஒருவர் ஒரு சொகுசில்லாத நாற்காலியில் அமர்ந்திருக்கும் பொது அவர்களால் ஒரு சுமூகமான பேரத்தை பேசி முடிக்க முடியாது . வசதிக்குறைவான இடத்தில் இருக்கும் பொது அவர்களால் மற்ற மனிதரிடம் ஒரு நல்ல உறவை ஏற்படுத்திக்கொள்வது கஷ்டம்.
- மனிதர்கள் தங்களுக்கு உடன்படும் விஷயங்களை நியாயத்துக்கு புறம்பாக இருந்தால் கூட செய்ய தயங்கமாட்டார்கள் அல்லது உதவி கேட்டவருக்கு அரைகுறையாக செய்வார்கள்
- அது எப்படியிருந்தாலும், நிறையமனிதர்கள் மற்றவர்களின் எதிர்பார்ப்பை அவர்களுக்கு வேண்டியவர்கள் முன்னிலையில் இருக்கும் போது மட்டும் அதிக ஆர்வத்துடன் செய்வார்கள்.
- பொய் சொல்வது என்பது நீங்கள் நினைப்பது போல் சாதாரணம் கிடையாது நிறைய மூளைக்கு வேலை கொடுக்கும் செயல் ,ஒரே நேரத்தில் பொய்க்கான வார்த்தைகளையும் உருவாக்க வேண்டும் அதே சமயத்தில் உண்மையை மறைக்கவும் வேண்டும் .கடைசியில் பார்த்தீர்களானால் எளிதான வார்த்தைகளை பயன்படுத்தி அவர்கள் சொல்லும் பொய்யானது மூளையின் வழக்கமான செயல்களுக்கு முரண்பட்டிருப்பதால் அது அவர்களுக்கு எளிதாய் இருக்காது
- மற்றவர்களுடைய கண்காணிப்பில் உள்ளபோது மனிதர்களின் நடத்தை ஒழுங்காக இருக்கும் .உதாரணமாக ஒரு உணவு விடுதியில் ஒரு மனிதக் கண்கள் பார்ப்பது போன்ற புகைப்படத்தை தொங்க விட்டீர்கள் என்றால் அங்கு வந்து சாப்பிடும் மக்கள் சாப்பிட்டவுடன் தங்கள் தட்டை தானாகவே சுத்தம் செய்ய முயல்வார்கள்
- ஒருவருடைய நடத்தையை பொறுத்தே அவருடைய நெறிமுறை்கள் இருக்கும்.பொய் சொல்லுதல், ஏமாற்றுதல் அல்லது எதாவது கொடுமையான செய்து பழகிவிட்டவருக்கு ஒரு கெட்டதும் நல்லதாகவே தெரியும் அவர்களுடைய பார்க்கும் கோணம் மாறிப்போய்விடும் .நீங்க கேட்பீங்க “என்னடா இது இவ்வளவு லஞ்சம் வாங்கராங்களே கொஞ்சம் கூட மனசாட்சி இல்லையா ?” என்று உண்மையில் அவர்களின் பார்க்கும் கோணம் பல முறை தவறு செய்த பிறகு மாறிப்போகிறது
- கவர்ந்திழுக்கும் தோற்றத்தையும் ,தேன் ஒழுக பேசும் முறையையும் நம்பி செல்லும் போது பெரும்பாலான நேரங்களில் ஏமாற்றமே மிஞ்சும் .ஏனென்றால் மக்கள் நேர்மையாளரை விட வெளித்தோற்றத்தையே அதிகமாய் நம்புகிறார்கள்
- தங்கள் மீது தொடுக்கப்படும் கிண்டல் கேலிகளை புரிந்துகொள்ளும் மனிதர்கள் அடுத்தவர் மனதை வெகு எளிதாக படித்து விடுவார்கள்
Comments
Post a Comment