அதிக மூலதனம் இல்லாமல் தொடங்கப்படும் தொழிலில் வெற்றியடைய வழிமுறைகள் என்ன?

  1. சிறிய மூலதனமோ அல்லது பெரிய மூலதனமோ தொழில் முதலீட்டின் ஒவ்வொரு ரூபாயும் உங்களால் சம்பாதிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். இதில் சிறிய யுக்தியே உள்ளது நீரை தானே சுமந்து செல்பவனுக்குத் தான் அதன் அருமையும் மகத்துவமும் தெரியும். அடுத்தவர் (பெற்றோர் உட்பட) பணத்தில் எந்த மூலதனமும் செய்யாமல் தொழிலுக்கான திட்டமிடல் வேண்டும்.
  2. தொழிலில் சொந்த பந்தம், நட்பு வட்டாரங்களை ஒரு குறிப்பிட்ட எல்லையில் வைக்க வேண்டும். தொழில் வேறு, பாசம் வேறு என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். உதாரணமாக உங்கள் நண்பன் உங்களிடம் வேலை செய்தால் அவன் பணக் கஷ்டத்திற்கு நீங்கள் பணம் கொடுத்து உதவலாம் நண்பனாக, ஆனால் முதலாளியாக சம்பள உயர்வு கொடுக்க கூடாது.
  3. சமயோஜித புத்தி வேண்டும், கடின வேலை அவசியமே அதேநேரத்தில் ஏன் எதற்கு என்ற தேடல் இன்றி செய்யும் அனைத்து உழைப்பும் வீணாகிவிடும்.
  4. வேலைக்கு ஏற்றவாறு ஓய்வினையும் திட்டமிட வேண்டும்.
  5. உங்கள் தொழிலுக்கு என்று ஒரு கொள்கையை நீங்களே உருவாக்கிக்கொண்டு அதை யாருக்காகவும் மாற்றாமல் வேலை செய்யுங்கள்.
  6. தோல்வியை ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கினை அதிகரிக்க வேண்டும்.
  7. பணியாளர்கள் செய்யும் வேலைக்கு உரித்தான அங்கீகாரம் வழங்குதல். வெறும் பணம் மட்டுமே அங்கீகாரம் அல்ல என்பதை நினைவில் கொள்க, வேலை சரியாக செய்யாதவரை திட்டும்போது நன்றாக செய்தவரை மனம் திறந்து பாராட்டுங்கள்.
  8. ஒருமுறை கண்ட தோல்வி மறுமுறை வராமல் பார்த்துக்கொள்வது. அதிலிருந்து சரியான பாடத்தினைக் கற்றுக்கொள்ள வேண்டும்.
  9. ஆரம்பத்தில் அல்லது நஷ்டத்தில் இகழ்ந்து பேசுபவருக்கு மனம் கொடுக்காமல் இருப்பது. ஏனெனில் அவர்களின் வேலையே அடுத்தவர்களின் சரிவைப் பார்த்து பேசுவது மட்டுமே.
  10. உங்கள் மனதில் தோன்றுவதை சரியான திட்டமிடலுடன் செய்யுங்கள். வெற்றியோ, தோல்வியோ மனது தாங்கிக்கொண்டு அடுத்தகட்ட முன்னேற்றத்திற்கு தயாராகிவிடும். அடுத்தவரிடம் அறிவுரைகள் கேட்கலாம் ஆனால் அதே மூலமந்திரமாக மாறிவிடக்கூடாது.
கேள்விக்கு நன்றி!

Comments