ஆங்கிலத்தில் பார்த்த ஒரு காணொளியின் தமிழாக்கமே இது:
இவை தான் வாழ்கையில் நம்மை சிறைபடுத்தும் ஏழு தடைகற்கள். இவற்றை உடைத்து எறியுங்கள். வாழ்க்கை மேம்படும்.
1. காலம் கடத்துதல்.
எந்த ஒரு வேலையை செய்ய வேண்டுமானாலும் உடனே செய்துவிடுங்கள். நாளை இல்லாமலும் போகலாம்.
2. முடிவெடுக்க முடியாத மனநிலை:
சரியான நேரத்தில், சரியான முடிவெடுக்க முடியாமல் எத்தனை பேர் மனதுக்கு பிடிக்காத வாழ்கையை, வேளையில் இருந்து கொண்டிருக்கிறார்கள்?
3. தாழ்வு மனப்பான்மை:
நான் எதற்கும் லாயக்கில்லை... அவன்/அவளிடம் இருக்கும் திறமை எனக்கில்லை என்றெல்லாம் எண்ணாதீர்கள். உங்களைப்போல் உங்களால் மட்டுமே இருக்க முடியும்.
4. அதிகமாக யோசித்தல்:
நடக்காத ஒரு விஷயத்தையோ, ஏன் நடக்க கூட வாய்ப்பில்லாத விஷயத்தையோ நினைத்து காலம் கடத்தாதீர்கள்.
5. பொறாமை: சொல்லவா வேண்டும்?
6. குறுகிய மனம்:
இந்த உலகத்தில் எல்லார்க்கும் வேண்டியது எல்லாம் உள்ளது. பரந்து விரிந்து மனதை விசாலமாக்குங்கள்.
7. பலிகடா மனப்பான்மை:
எல்லா கஷ்டங்களும் எனக்கு மட்டுமே நடக்கிறது என்று ஒரு மாயக்கோட்டை கட்டாதீர்கள்.

Comments
Post a Comment