நான் பின்பற்றும் சில வற்றை கீழே கொடுத்துள்ளேன்:
1. நாம் பேச வேண்டிய topic தெளிவு வேண்டும்.
2. எந்த வகையான எதிர் கேள்வி கேட்டாலும் பதில் சொல்லும் அளவுக்கு செறிந்த அறிவு வேண்டும்
3. கூட்டத்தில் அமர்திருப்பவர்கள் யாரும் வானத்தில் இருந்து வந்தவர்கள் கிடையாது… அவர்களும் நம்மில் ஒருவரே..
4. கூட்டத்தை பார்த்து தைரியமாக பேசுவது ஒரு கலை…அதில் ஒருவகையான போதை கூட உள்ளது…அதை ஒருமுறை ருசித்து விட்டால் அவ்வளவு தான்…பிறகு நீங்களும் ஒரு பேச்சாளர்தான்!
5. நன்றாக சிரித்தபடி கைகளை விரித்து அசைத்து மொத்த கூட்டத்தையும் பொதுவாக பார்த்து பேச வேண்டும்.
6. ஒரு வழி பாதை போல நீங்களே பேசிக்கொண்டிருக்க கூடாது…interactive sessions கூட மேடை பேச்சை ஆர்வம் அதிகரிக்க செய்யும்.
6. மொத்த பேச்சையும் சிறு குறிப்புகளாக மாற்றி அதை podium மீது வைத்து கொண்டு பேசலாம்.
8.ஒருவேளை திடீரென்று கூட்டத்தில் இருந்து ஒருவர் கேள்வி கேட்டு உங்களுக்கு பதில் தெரிய வில்லை என்றா லும் பரவா இல்லை…தைரியமாக …பதிலை அறிந்து தங்களுக்கு பின்னர் தெரிவிக்கின்றேன் என்றும் கூறலாம்…எதுவுமே தப்பில்லை!
9.ஏதாவது presentation குடுக்க நேரிட்டால் அதனை பார்த்து பார்த்து பேசாதீர்கள்…முடிந்தவரை கூட்டத்தை பாருங்கள்.
10. உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும்…குரலையும் பாதுகாக்கவேண்டும் .
நேரம் கிடைக்கும் போதெல்லாம் நான் மேலும் சில point add செய்கிறேன்!
நன்றி

Comments
Post a Comment